[embedyt] https://www.youtube.com/watch?v=_lRTd4Q9cJQ[/embedyt]
நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இணைந்து நடித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் வெளியான கழுகு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது , அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தையும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.