அஸ்தானா:
பளுதூக்குதல் வீரர், லையா லியினின் இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பறித்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் லையா லியின், கடந்த 2008, 2012ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் 94 கி.கி., எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன்பின் தற்போது ஒலிம்பிக் கமிட்டியின் மாற்றியமைப்பட்ட விதிகளின் கீழ் வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதில் லியினின் 2008 பீஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது, தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது இரண்டு தஙகப்பதக்கங்களையும் பறிப்பதாக கஜகஸ்தான் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
இதுகுறித்து லியின் கூறுகையில்,’இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது குறித்து நான் மேல் முறையீடு செய்வேன்,’ என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel