அல்மாதி
கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேருடன் மரணம் அடைந்துள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அல்மாதி நகரில் இருந்து நூர் சுல்தான் நகருக்கு புறப்பட்டது. இதில் 95 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்தனர். இந்த விமானம் கிளம்பும் போது போதிய உயரத்தை எட்டாததால் அருகில் இருந்த கான்கிரீட் சுற்றுச் சுவரில் மோதியது.
இதனால் விமானம் நிலை குலைந்து அங்கிருந்த 2 மாடிக் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுமார் 35 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயணிகளை மீட்கும் பணி மேலும் தொடர்ந்து வருகிறது. இந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]