சிங்கப்பூர்

நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது.

நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில் தெரிந்தது.    இந்த கிரகணத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.   இதற்கான சிறப்புக் கண்ணாடி மூலமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமும் பலரும் கிரகணத்தைப் பார்த்தனர்.

இந்த கிரகணம் சிங்கப்பூரிலும் தெரிந்துள்ளது.  இந்த கிரகணத்தை அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் சிறப்புக் கண்ணாடி மூலம் பார்த்துள்ளனர்.   அப்போது வேறு சில அபூர்வ நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றாகப் பிறை நிழல்  தென்பட்டுள்ளது.

இந்த வளைந்த நிழலைச் சிங்கப்பூர் வாசிகள் வாழை நிழல் எனவும் குறிப்பிடுகின்றனர்.  குறிப்பாக இலைகளுக்கிடையில் சூரிய வெளிச்சம் அடிக்கும் போது தரையில் முழு வெளிச்சம் தோன்றாமல் பிறை வடிவ நிழலுடன் வெளிச்சம் காணப்பட்டுள்ளது.