டில்லி
காவிரி ஆணையம் தமிழகத்துக்கு 2.5 டி எம் சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28 ஆவது கூட்டம் நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்ற பிறகு 3 மாதங்களாகக் கூட்டம் நடைபெறவில்லை. இக்கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீரை விநாடிக்கு 998 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக தொடர்ந்து காவிரி நீரைப் பெறுவதற்குக் கர்நாடகாவிடம் போராடி வருகிறது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையமும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், குறைவான அளவே திறக்கப்படுகிறது. எனவே இது தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
[youtube-feed feed=1]