சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை கடந்த 2023ம் ஆண்டு உருவாக்கி அதற்கு “கவாச்” என்று பெயரிட்டுள்ளது. கவாச் என்ற ஹிந்தி மொழி வாசத்திற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள். இந்த சாதனத்தை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான (RDSO) உருவாக்கியது. தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் முக்கிய வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கவாச் தொழில்நுட்பம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே சாா்பில் ‘கவாச்’ தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது. அபாய சிக்னலை கடந்து செல்வது, அதிவேகம், மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளின் போது ரயில் ஓட்டுநரை இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தொழில்நுட்பம் எச்சரிக்கும்.
இதனால் விபத்துகளை தடுக்க உதவியாக இருக்கும். முக்கிய வழித்தடங்கள் அந்தவகையில், ரயில் விபத்துகளை தடுப்பதற்காக இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ முயற்சிக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதை தொடா்ந்து, ‘ஜீரோ விபத்துகள்’ என்ற இலக்கோடு தெற்கு ரெயில்வே மண்டலத்தில் முதற்கட்டமாக வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் வழித்தடம் உள்பட மொத்தம் 2,271 கிலோ மீட்டருக்கு 25 ரயில் வழித்தடங்களில் இந்த ‘கவாச்’ அமைக்கும் பணி படிப்படியாக நடைபெற உள்ளது.
அதன்படி, சென்னை – அரக்கோணம், அரக்கோணம் – ஜோலாா்பேட்டை, சென்னை சென்டிரல் – கடற்கரை, எழும்பூா் – தாம்பரம் – செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை – சேலம் – ஈரோடு , ஈரோடு – இருகூா் – கோவை, திருச்சி – விழுப்புரம், மதுரை – விருதுநகா், வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி, திருநெல்வேலி – நாகா்கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கிய வழித்தடங்களில் இந்த ’கவாச்’ தொழில்நுட்பம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவாச் (Kavach) என்றால் என்ன?
ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான (RDSO) கவாச் என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்கியது. கவாச் என்ற ஹிந்தி மொழி வாசத்திற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள்.
இந்த கவாச் தொழில்நுட்பத்தின்படி, ரயில்கள், ஆபத்தில் சிக்னல் கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவும். இதனால், ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள கவாச் விபத்து தடுப்பு கருவி தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு எஞ்சின்களையும் நிறுத்திவிடும்.
– லோகோ பைலட் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறினால், தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது.
– அதிக வேகம் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வண்டியில் லைன் சைட் சிக்னலை மீண்டும் செய்கிறது.
– இயக்க அதிகாரத்தின் தொடர்ச்சியான புதுப்பிப்பு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
– லெவல்-கிராசிங் கேட்களில் ஆட்டோ விசில் அடிக்கிறது.
இந்த புதிய தொழில்நுட்பகம், தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் ஆகிய பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச்சின் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி கிடைத்த நிலையில், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.