சென்னை:
வார விடுமுறை நாளான இன்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியுள்ளது.

சென்னை, காசிமேட்டில் மீன்வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100 முதல் ரூ.200 அளவிற்கு கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகமாக விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் விலை உயர்வடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel