ஸ்ரீநகர்:

2 நாளேடுகளுக்கு விளம்பரம் தருவதற்கு மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து, காஷ்மீரிலிருந்து வெளிவரும் நாளேடுகளின் முதல் பக்கம் இன்று செய்தியே இன்றி வெற்றிடமாக இருந்தது.


காஷ்மீரிலிருந்து வெளிவரும் கிரேட்டர் காஷ்மீர் மற்றும் காஷ்மீர் ரீடர் நாளேடுகளுக்கு விளம்பரம் தருவதை மாநில அரசு நிறுத்தியது.

இதற்கு விளக்கமும் தரப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரிலிருந்து வெளியாகும் ஆங்கிலம் மற்றும் உருது நாளேடுகள் தங்கள் எதிர்ப்பை நூதனமாக பதிவு செய்தன.

இன்று முதல் பக்கத்தில் செய்தியே போடாமல் வெற்றிடமாக விட்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் எந்த காரணமும் சொல்லாமல் இரு நாளேடுகளுக்கான விளம்ரத்தையும் ரத்து செய்துள்ளதாக அனைத்து நாளேடுகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனையடுத்து, கிரேட்டர் காஷ்மீர் நாளேடு 20 பக்கங்களிலிருந்து 12 பக்கங்களாக குறைந்தது. காஷ்மீர் ரீடர் 4 பக்கங்களை குறைந்து 12 பக்கங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.