ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த் தளபதி புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட நாள் முதல் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்து வருகிறது. இன்று 8 வது நாளாக கலவரம் நடக்கிறது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் சவ்ஜான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்ட போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்னர்.
இதற்கிடையில் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இரு தீவிரவாத குழுக்கள் இடையே  நடைபெற்ற மோதலில்  முன்னாள் தீவிரவாதி ‌ஷபீர் அகமது பண்டிட்டின் உறவினர் தாரிக் அகமது பண்டிட், மன்சூர் அகமது ஆகியோர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.