
வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘கசட தபற’.
இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன்.
2019-ம் ஆண்டிலேயே இந்தப் படம் தயாராகிவிட்டது. ஆனால், தொடர் கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது ‘கசட தபற’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சோனி லைவ் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
[youtube-feed feed=1]We are happy to announce our #kasadatabara will be streaming very soon on @sonyliv @chimbu_devan @vp_offl @tridentartsoffl @sonylivintl @001danish @golu_a @madhurasreedhar @dhananjayang #TalesOfSouthMadras ps. the artwork in this poster was done by our director in just 20mins👏🏼 pic.twitter.com/VcmfwDG1R4
— venkat prabhu (@vp_offl) August 8, 2021