சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று 2வது முறையாக ஆஜராகிறார். இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்ட கரூர் நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு, சம்பவம் நடைபெற்ற பகுதி, இறந்தவர்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட இடம் மற்றும் பொதுமக்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பலரிடம் விசாரணை நடத்தினர். தொடர்து, கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்துத.வெ.க. தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர், பொங்கல் விடுமுறை காரணமாக, விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜனவரி 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று (18ந்தேதி) மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். சி.பி.ஐ. முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜராகிறார். இன்றும் சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
[youtube-feed feed=1]