கரூர்: தவெக தலைவரின் விஜயின்  கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார்  உள்பட தவெக நிர்வாகிகள் நேரில்  விசாரணைக்கு ஆஜராக  சம்மன் அனுப்பி உள்ளது.

கருர் கூட்ட நெரிசல்  41 பேர் பயிலனா சம்பவம்  தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை  கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில்  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் திமுக அரசு அதிக ஆர்வம் காட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. அதிரடியாக இரவோடு இரவாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. அதுபோல ஒரே இரவில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு உடற்கூறாய்வு செய்தது, மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியின் ஒருதலைப்பட்சமான விமர்சனம் போன்றவை, இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. இயைடுத்து, தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடியதும், வழக்கு சிபிஐ மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஆணையங்களை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து, , கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்தது. இந்தக் குழுவில் தமிழக கேடரை சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. மேலும், புலன்விசாரணை குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. தாக்கல் செய்யும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை கண்காணிப்பு குழு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு தேவைப்படும் பட்சத்தில் தாக்கல் செய்யும். புலன்விசாரணையை சட்டப்படி குறிக்கப்பட்ட நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இதைடுத்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.  இதுதொடர்பாக,  கடந்த வாரம் கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த முதல் தகவல் அறிக்கையில் ஏ1 ஆக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஏ2 வாக புஸ்சி ஆனந்த, ஏ3 ஆக நிர்மல் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருந்தன.

இதைத்தொடர்ந்து, ஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை  (அக்டோபர் 28) நேரில் ஆஜாரகி விளக்கமளிக்க வேண்டும் என்று சிபிஐ சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்  இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்காக  மாமல்லபுரத்தில் உள்ள  தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.