கரூர்: நடிகர் விஜயின் பிரசார பயணத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலில்,  அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை  என பதிவிட்டுள்ளார்.

கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோ, தலைமைச்செயலகம் வந்து மூத்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 நிதி அறிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையம் அமைப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இரவோடு இரவாக,  விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார்.   அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபர்களையும் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, அவர் தனது எக்ஸ் தளத்தில்,  கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோவை பகிர்ந்து பதிவிட்டு உள்ளார்.

அதில், இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இரவு கரூர் சென்ற முதல்வர் ஸ்டாலின்சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை குறித்து  கேட்டறிந்தார். அவருடன்  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சிவசங்கர், கே.என்.நேரு, எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  நிலவரம் குறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்டறிந்தேன் அருகில் உள்ள அமைச்சர்களையும் கரூர் அனுப்பி வைத்தேன் மருத்துவக்குழு, காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டேன். அதிகாரிகளை, டிஜிபியை அழைத்து ஆலோசனை நடத்தினேன் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் பெரும் துயர சம்பவத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் துயரச் சம்பவம் நடந்திருக்கக்கூடாது… இனி நடக்கக்கூடாது கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவிக்கிறேன்

சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.