சென்னை:

ரசு பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியர் உதவியுடன், சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் வகையில் தயாரித்துள்ள அசத்தலான  செயற்கைக்கோள் வரும் 11ந்தேதி விண்ணில் பறக்க உள்ளது. இது அனைத்து தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது.

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து ஆசிரியரின் ஆலோசனையுடன்  30 கிராம் எடையிலான மிகச்சிறிய செயற்கைக் கோள் ஒன்றை தயாரித்துள்ளனர். இது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என கொண்டாடப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாளான ஆகஸ்டு 11ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் தனபாலுடன் பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில், மாணவர்களிடையே விண்வெளி குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையில் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் விக்ரம் சாரா பாயின் 100-வது பிறந்த நாளை கவுரவிக்கும் வகையில்,  “விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்” என்ற போட்டியை அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தப் போட்டியில் ஏராளமான பள்ளிகள் கலந்துகொண்டதில், 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், கலந்துக் கொண்ட பள்ளிகளில் ஒன்றான  கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் இணைந்து, அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டியுடன்  சிறிய ரக செயற்கைக் கோள் ஒன்றை தயாரித்துள்ளனர்.

தங்களது தயாரிப்பு குறித்த வீடியோ தயாரித்து  ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர். இதை ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்த சிறிய செயற்கைக்கோளை தயாரித்த  மாணவர்களும், ஆசிரியர் தனபாலும் சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில்  சிறுசேரியிலுள்ள ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பிற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அங்கு வைத்து இந்த செயற்கைக்கோளை,  ஹீலியம் வாயுவைக் கொண்டு இயக்கப்படும் ராட்சத பலூன் உதவியுடன்  விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், அப்போது விண்வெளியில் குறிப்பிட்ட தூரம் சென்றதும் பலூன் வெடித்து செயற்கைகோள் மட்டும் தனியாக பிரிந்து அங்கிருந்து வானிலை குறித்த தகவல்களை சேகரித்து, பின்னர்  பாராசூட் அமைப்பின் உதவியால் பூமிக்கு வந்தடையும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்கைக்கோள் வரும் 11ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானியான சந்திரயான் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கை கோளின் பயன் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ள மாணவர்கள் குழு தலைவர் நவீன், “தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை  பூதாகரமாக உள்ளது.  குறைந்த மழைப் பொழிவு, நிலத்தடி நீர் மட்டக் குறைவு ஆகியவற்றை நாம் சந்தித்து வருகிறோம். நிலத்தடி நீர் குறைய சீமைக்கருவேல மரங்கள் முக்கிய காரணமாக இருநதரு வருகின்றன. அதை அழிக்கும் வகையில் இந்த செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆய்வில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, சீமைக்கருவேல மரங்களை முற்றிலும், அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயஇருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மாணவர்களின் சாதனையை முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கல்வி அதிகாரிகள் உள்பட அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.