நத்தம் விஸ்வநாதன் - ரெய்டு - அன்புநாதன்
நத்தம் விஸ்வநாதன்   –   ரெய்டு   –   அன்புநாதன்

கரூர்:
திமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது  அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின்போது,  கரூரில் அன்புநாதன் என்ற தொழிலதிபர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.  அந்த பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் , அன்புநாதனுக்கு அனுப்பியது என்றும், அதற்கான ஆதாரங்கள்  வருமான வரித்துறை ரெய்டின்போது சிக்கியதாகவும், அதையடுத்து அந்த பணம் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான என அறிவித்தது.
அதிமுக ஆட்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர், நத்தம் விஸ்வ நாதன்.  அ.தி.மு.க.,வில் செல்வாக்கு பெற்ற, ஐவர் அணியில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
அதிமுக ஆட்சியின்போது  அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதனால் ஜெயலலிதா கோபத்திற்கு ஆளானார். சட்டசபை தேர்தலில், அவர் கேட்ட நத்தம் தொகுதிக்கு பதிலாக, ஆத்துார் தொகுதி வழங்கப்பட்டது. அதில் அவர்  தோல்வி அடைந்தார்.
சட்டசபை தேர்தல் நேரத்தில் கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. அப்போது அவரிடம் இருந்து ரூ.5 கோடி தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அப்போதே இதுபற்றி பரவலாக பேசப்பட்டது. தற்போது நடைபெற்ற வருவமான வரித்துறை ரெய்டில் அதற்கான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டன. அதில்  அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துக்கும் இடையே, வர்த்தக தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
வருமான வரித்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அன்புநாதன் யார் யாருக்கெல்லாம் பினாமியாக இருந்துள்ளார்  என்பது தெரிய வந்தது. அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டின்போது சிக்கி ஆவணங்கள், டைரிகள்  மூலம் , அவர்  யாரு யாருக்கெல்லாம்  பினாமியாகவும், கருப்பு பணத்தை மாற்றும் வேலையையும் செய்து வந்தார் என்ற  தகவல் தெரியவந்தது.
அவரது செல்போனை ஆராய்ந்ததில் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி ஆகியோரும் தொடர்ந்து பேசி உள்ளார்.  அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவனங்களில், பெங்களூரில் மடிவாலா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு இடத்தை ரூ.55 கோடிக்கு அன்புநாதனுக்கு மேயர் துரைசாமி தனது மகன் வெற்றி மூலம் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.  இதை ஆராய்ந்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி மற்றும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது  வருமான வரித்துறை. விசாரணை யில்  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் ஆகியோர்  அன்புநாதனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் சட்டமன்ற தேர்தலின்போது, கரூர் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரியது என தெரியவந்ததாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக கரூர் அன்புநாதன் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அன்னிய செலாவனி (FEMA) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அன்புநாதன் விரைவில் கைது  கைது செய்யப்படலாம் என தெரிகிறது.