தற்கொலை மிரட்டல் விடுத்த காருண்யா பல்கலை ஊழியர் பணி நீக்கம்

கோவை:

கோவை அருகே உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஊழியர் ஒருவர் அலுவலக மேல் தளத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.  இரண்டு மணி நேரமாக தற்கொலை மிரட்டலுக்குப் பிறகு அவர் கீழே இறங்கினார்.

அவர், “காருண்யா பல்கலையில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. மேலும் உரிய விடுப்பு எடுக்கவும் அனுமதிப்பதில்லை. நிர்வாகம் மிகவும் கொடுமைப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அந்த ஊழியரை நிர்வாகம், பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மற்ற ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Karunya University employee dismissed, who threatening to suicide