சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயம் வந்தார்.

உடல் நல குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். இடையில் தொண்டர்களையும், கட்சியினரையும் சந்தித்து வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு கோபாலபுரத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் சென்றார். செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அறிவாலயத்தில் உள்ள் அவரது அறைக்கு கருணாநிதி சென்றார்.

சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு கோபாலபுரம் சென்றார். சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் கருணாநிதி அறிவாயலம் வந்து திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.