சென்னை :

தி மு க தலைவர் கருணாநிதி இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தி மு க தலைவர் மு.  கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று காலை சுமார் 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.    பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நேற்று இரவு உடல்நிலை சீராக இல்லாததால் தொண்டையில் பொருத்துப்பட்டுள்ள குழாயை அகற்ற ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

சில மணி நேரங்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கைதெரிவிக்கிறது