சென்னை; கருணாநிதி பிறந்தநாளையொட்டி, சென்னையில் ர் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார்.

ஜூன் 3ந்தேதி மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் நடத்த திமுகவினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கருணாநிதி பிறந்தநாளையொட்டி, சென்னையில் நாளை மின்சார பேருந்து சேவையை மு தல்வர் தொடங்கி வைக்கிறார் .
ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள டீசல் பேருந்துகள் படிப்படியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக மின்சார பேருந்துகளையும் தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டா் வெளியிடப்பட்டு, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையைப் பொருத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாளை (ஜூன் 3) தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதையடுத்து, மின்சார பேருந்து சேவை முக்கிய நகரங்களுக்கும் இப்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார பேருந்துகளை இயக்க இப்பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களே பணியாட்களை நியமிக்கும்வ கையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன
மேலும், பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்து, சாதாரண கட்டணப் பேருந்து, விரைவு, குளிா்சாதனப் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.