சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கலைஞரின் 97வது பிறந்தநாள் திமுகவினர் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாலையோரம் கலைஞர் படத்தை வைத்து, மாலை அணிவித்து திமுக தொண்டர்கள் மரியாதை செய்து வருகின்றனர் பிறந்தநாளையொட்டி, செஙனடின மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில், “போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்” என எழுதப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த நிர்வாகிகள் அங்கு வந்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். ஸ்டாலினுடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 38 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின். மேலும், 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும், 36 பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார்.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே பேரறிஞர் அண்ணாவின் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும்” என தெரிவித்து உள்ளார்.
திமுக எம்எல்ஏ உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ஆதிக்கம் – அடக்குமுறை – மதவெறி ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டை காத்து அரை நூற்றாண்டுக்கும் மேல் நிழல் தந்த முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுகூரும் வண்ணம் அவர் பிறந்த நாளான இன்று அவர் நினைவிடத்தில் தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து மரக்கன்று நட்டோம். என தெரிவித்து உள்ளார்.