டில்லி: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், “கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்றார்.
24-1466745368-karunanidhi-z-security
”மத்திய அரசு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கி உள்ள அனைவருமே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே இந்த முடிவு அரசியல் ரீதியாகவே எடுக்கப்பட்டிருக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
பாஜக தரப்பிலோ, “மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின்படியே இந்த முடிவை உள்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது. அவசியமான அளவு தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இது முழுக்க முழுக்க அரசு ரீதியான செயல்பாடுதான், இதில் அரசியல் இல்லை” என்று சொல்லப்படுகிறது.