சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக  கடந்த மாதம் 25ந்தேதேதி திமுக தலைமை அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது.
வழக்கமாக உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாததால், கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என  கூறி,  திமுக தலைவர் கருணாநிதியை காண வருவதை பார்வையாளர்கள் தவிர்க்குமாறு திமுக  தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கருணாநிதி உடல்நிலை குறித்து வேறு எந்தவித தகவல்களும் வராத நிலை யில், இன்று அவர் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தவர்கள் என்று ஒரு பட்டியலை திமுக  தலைமை வெளியிட்டு உள்ளது.
karunathi
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதியின்  உடல் நலம் குறித்து, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்  குலாம் நபி ஆசாத்தும்  நாடாளுமன்ற மாநிலங்களவை குழு கழகத் தலைவர் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தனர்.
மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுவை அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர்,  முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,  இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ்,கோபண்ணா, ஜெ.எம். ஆரூண்,  திருமதி குஷ்பூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன், நாசே. ராமச்சந்திரன் ஆகியோரும்,
கவிப்பேரரசு வைரமுத்து,பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்ரம ராஜா, எஸ்.வி.சேகர்  மற்றும்  மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் நேரில் வந்து  கழகப் பொருளாளர் தளபதி அவர்களைச் சந்தித்து,  தலைவர் அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும் தொலைபேசி வாயிலாக கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்  வைகோ, கவிக்கோ அப்துல் ரகுமான், டி.கே. ரெங்கராஜன் எம்.பி., ஆகியோர் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.