எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. அவரது அமைச்சரவையில் வீற்றிருந்தார் நாஞ்சில் மனோகரன்.
எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் “ மந்திரக்கோல் மைனர் (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்தவர். இன்றோ அண்ணா நகரில் பத்து லட்சரூபாய் பங்களா வைத்திருக்கிறார். இது எப்படி வந்தது’ என்று எழுதியிருந்தார் கருணாநிதி.
அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதற்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார் நாஞ்சில் மனோகரன்.
உடனே முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா! நடிகர் ஆட்சியின் கோலோச்சும் மந்திரக்கோல், வீட்டை வாங்க தயாரா? என்று கேட்கிறது. உன் உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்குவோம் வீட்டை’ என்று எழுதினார்.
உணர்ச்சிவசப்பட்ட தி.மு.க. தொண்டர்கள், தங்கள் உழைப்பில் சம்பாதித்த சிறு ஊதியத்தை எல்லாம் அனுப்பத் துவங்கினர். பதிமூன்று லட்ச ரூபாய் சேர்ந்தது.
ஆனால் அதன் பிறகு அந்த வீட்டை வாங்குவது பற்றி கருணாநிதி மூச்சுவிடவே இல்லை.
காலம் மாறுகிறது…
எம்.ஜி.ஆர். பக்கம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதி பக்கம் வந்துவிட்டார். அதே அண்ணா நகரில் கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள்.
மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்கிறார். கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்…உய்…என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா…கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே. பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான். தலைவன் தலைவனாகவே இருக்கிறான்.
படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான் இன்று தலைமுறைகளை கடந்த சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் எந்த தொண்டனும் கேட்கவில்லை.
இதுதான் தொண்டர்களின் தியாகம். தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்.
(வாட்ஸ்அப் தகவல்)