சென்னை:

சர்ச்சைக்குரிய கருத்துகளை செய்தியாளர் சந்திப்பின் போது பேசுவதையும், சமூக வலைதளங்களில் எழுதுவதையும்  சுப்ரமணியன்சாமி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன்சாமி, கச்சத்தீவு குறித்து பிரச்னைக்குரிய கருத்தை வெளிப்படுத்தினார்.

பிரதமர் இந்திராகாந்தி அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு, கச்சத்தீவை தாரைவார்க்க பணம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  மேலும் அவர், இலங்கை கடற்கரைப்பகுதியில் தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க மத்திய அரசு இலங்கையுடன் ஒப்பந்தம் போடவேண்டும் என்று கூறினார்.