மதுரை
இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து மரணம் அடைந்தார்.

கருமுத்து கண்ணன் மதுரையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜர் மற்றும் ராதா தம்பதியினரின் ஒரே மகன் ஆவார். க்ண்ணன் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி, மற்றும் தியாகராசர் வேளாண்மைக் கல்லூரி உள்ளிட்ட பலகல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகச் செயல்படுகிறார்.
இவர் பல நூற்பாலைகளுக்குத் தலைவராக உள்ளார். பல ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தக்கார் ஆக இருந்து வருகிறார். மதுரை மாநகர் மேம்பாட்டுக்காக இவர் பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். இவரது மனைவியின் பெயர் உமா ஆகும்.
கடந்த சில நாட்களாக கருமுத்து கண்ணன் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சுமார் 71 வயதாகும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவரது மரணம் மதுரை மக்களைக் கடும் சோதத்தில் ஆழ்த்தி உள்ளது.
[youtube-feed feed=1]