இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதனிடையே பிரதமர் மோடி இன்று ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரது வேண்டுகோளுக்கு சமூகவலைதளத்தில் மீம்ஸ்களையும் பரவவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

”இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெல்வோம்” என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]