https://www.instagram.com/p/B29NT52pzT9/

பாலிவுட்டில் சமீபமாகப் பிரபலமாகி வரும் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன்.கார்த்திக் ஆரியனுக்கு சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய பெண் ரசிகைகள் உள்ளனர் .

தற்போது கார்த்திக் ஆரியன் பெண்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வருகிறார். அவரை பார்க்க வேண்டுமெனக் கல்லூரி மாணவிகள் சிலர் அவர் வீட்டின் முன்பு சுமார் 15 நாட்களாக தினமும் வந்து காத்திருந்துள்ளனர். இதனால் அவர்களை கார்த்திக் ஆரியன் சந்தித்தார்.

அப்பொழுது ஒரு பெண் வீதியில் முழங்காலிட்டு கார்த்திக் ஆரியனிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் ஆரியன் அந்த பெண்ணை தூக்கி விட்டார். பின்னர் அவரிடம் இது போல் எல்லாம் செய்யாதீர்கள் என அன்பாக சொல்லிவிட்டு அந்த பெண்ணுடன் ஒரு செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.