பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது.

இந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கார்த்திக், தான் குணமாகப் பிரார்த்தனை செய்யுமாறு தன் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, சித்தாந்த் சதுர்வேதி, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.