‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்காக தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், இந்த குறும்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் தனது யூட்யூப் சேனலில் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கார்த்திக் தனது காதலி ஜெஸ்ஸி நீண்ட வருடங்களுக்கு பின் அவரது சொந்த ஊரான ஆழப்புழா வந்திருப்பது அவரின் அக்கா முகநூல் புத்தக பதிவின் மூலமாக அறிந்து அவருக்கு அழைத்து பேசுவார்.
ஊரடங்கு கொரோனா , அதனால் பாதிக்கப்பட்ட திரையரங்குகள் . அதன் காரணமாக ஒளிபெறும் OTT இப்படி இன்றைய சூழலுக்கேத்தார் போல் டயலாக் .
திடீரென கார்த்திக் எனக்கு நீ வேணும் ஜெஸ்ஸி என சொல்வார், நான் இப்போது உன்னை காதலிப்பதாக சொன்னால் உலகம் முழுவதும் உள்ள கொரோனா போய்டுமா என ஜெஸ்ஸி கேக்க, சொல்லித்தான் பாரேன் என்று கார்த்திக் சொல்ல மனதில் இருந்து சொல்லாமல் உதட்டிலிந்து சொல்கிறேன் ஐ லவ் யூ கார்த்திக் என்பார் ஜெஸ்ஸி.
ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸி மௌனராகம் படத்தின் வசனம் போல பேச. மணி சார் கடைசியில எனக்கே ஆப்பு வெச்சிடிங்கலே என feel செய்வார்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு தனது பேவரைட் ஹீரோவை படத்தில் பார்த்தது அதுவும், விண்ணைத் தாண்டி வருவாயாவின் தொடர்ச்சியில் பார்த்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
த்ரிஷா , சிம்பு , கெளதம் மேனன் , AR ரஹ்மான் என அதே கூட்டணி . இந்த லாஃடவுனிலும் விருந்து படைத்துள்ளது .