
சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் கார்த்திக், அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் துடித்த கார்த்திக், உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேனில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]நவரச நாயகனுக்கு காலில் அறுவை சிகிச்சை. #actorkarthik #navarasanayagan #karthikmuthuraman #SpeedyRecoveryKarthik pic.twitter.com/RILpYxkT2w
— FridayCinema (@FridayCinemaOrg) July 28, 2021