சென்னை,

தேடப்படும் நபர் (லுக் அவுட்) என்ற சர்க்குலரை ரத்து செய்யும்படி  கார்த்தி சிதம்பரம் மீண்டும் புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரம் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேடப்படும் நபர்  கார்த்தி சிதம்பரம் என்று மத்தியஅரசு அறிவித்து, அவர் வெளிநாட்டுக்கு தம்பி விடாதபடி  விமான நிலையங்கள், கப்பல் நிறுவனங்களுக்கு சர்க்குலர் அனுப்பியது.

இதை எதிர்த்து காத்தி சிதம்பரம் தொடுத்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. மல்லையாவை போல் கார்த்தி சிதம்பரமும் தப்ப முயற்சி செய்யக்கூடாது என்பதாலும், இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு மல்லையாவுடன் ஒப்பிட்டு பேச கூடாது என கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

 

இந்த நிலையில், லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.