டில்லி
இன்று வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என அறியப்படாமல் இருந்தது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என ஊகங்கள் கிளம்பின.
காங்கிரஸ் கட்சி தனது அடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பீகார்,காஷ்மீர், கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆவார்/ இவருடைய தாய் நளினி சிதம்பரம் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். இவர் தந்தை ப சிதம்பரமும் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது