பெங்களுரு:
கர்நாடகாவில் கபாலி திரைப்படத்தை எதிர்த்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர்.
கபாலி படம் வெளியான அன்று கன்னட சாலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது கட்சியினர் கபாலி போஸ்டரை எரித்து போரட்டம் நடத்தினர்.

இதையடுத்து மீண்டும், கன்னட சாலுவளி கட்சி, கன்னட ரக்சன வேதிகே உள்ளிட்ட 15 கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னட சாலுவளி கட்சியின் தலைவரர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதையடுத்து, சேஷாத்ரி புரத்தில் உள்ள நட்ராஜ் திரையரங்கை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினியை கண்டித்து கோஷம் எழுப்பி, அங்கிருந்த பேனர்களை கிழித்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் கன்னட அமைப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைகலப்பாக மாறியது. இதையறிந்த போலீசார் கன்னட அமைப்பினருடன் சேர்ந்து ரஜினி ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டிர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் காயமடைந்தனர்.
Patrikai.com official YouTube Channel