சிக்மகளூரு: யானை தாக்குதல் காரணமாக பெண் உயிரிழந்த விவகாரத்தில் கொந்தளித்திருந்த கிராம மக்கள், அங்கு சென்ற பாஜக எம்எல்ஏவின் முறையற்ற பதிலால் கோபமடைந்து, அவரது  வேட்டி, சட்டையை கிழித்து விரட்டியத்தனர். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள ஹுல்லேமனே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், யானைத் தாக்கி உயிரிழந்தார். அந்த பகுதியில் யானையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தடுக்க கோரி அக்கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், எம்எல்ஏவிடமும் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், யானை தாக்கி ஒரு  பெண் ஒருவர் உயிரிழந்தார். பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹுல்லேமனே கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அங்கு சென்று பார்த்து  கொந்தளித்துபோய் இருந்தனர். இந்த நிலையில், முதிகெரே பாஜக எம்எல்ஏவும், எம்.பி.யுமான குமாரசாமி அங்கு சென்று ஆறுதல் கூறச்சென்றார்.

இதைக்கண்ட அந்த பகுதி மக்கள், அவரிடம் யானையின் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல முறை கூறியதும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை  சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சரியான முறையில்  பதிலளிக்கவில்லை. இதையடுத்து, சிலர் அவர்மீது கிராம மக்கள்  தாக்குதல் நடத்தியதுடன், அவரது வேஷ்டி, சட்டையை கிழித்து விரட்டியடித்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அருகே உள்ள காவல்துறையினர், அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கூறிய அந்த கிராம மக்கள்,  யானைத் தாக்குதலில்யானை தாக்குதலுக்கு எம்எல்ஏ சரியாக பதிலளிக்கவில்லை என  குற்றம் சாட்டினர்.