காலாபர்கி, கர்நாடகா

னக்கு மாலை அணிவிக்க செலவிடும் பணத்தை மக்கள் நல திட்டத்துக்கு கொடுக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.

கர்நாடக மாநில மக்கள் நலத்துறை அமைச்சரான பிரியங்க் கார்கே காலாபர்கி மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தொகுதியான சித்தாப்பூர் அதே மாவட்டத்தில் அமைந்துல்ளது. கார்கே நேற்று தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாக்களில் கலந்துக் கொண்டார். அப்போது அவருக்கு அனைத்து இடங்களிலும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டன.

அவர் தனது தொகுதியில் ரூ.85 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள ஒரு பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். திக்கானம் என்னும் இடத்தில் அமைக்கப்பட உள்ள வால்மீகி கல்யாண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வில் பல நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் பிரியங்க் கார்கே, “இந்த விழாக்களில் எனக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் என்னை தேர்ந்தெடுத்த மக்கள் என்றும் என்னை வாழ்த்த விரும்புகிறேன். அதற்கு நான் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும். அந்த நலத்திட்டங்களுக்கு நிதி உதவி தேவை. ஆகவே இனி பொது நிகழ்ச்சிகளில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை தவிருங்கள்.

அதற்கு செலவிடும் பணத்தை மக்கள் நலத்திட்டங்கள் செய்ய மாநில அரசின் மக்கள் நலத்துறை அல்லது செஞ்சிலுவை போன்ற சமூக நல நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நகரங்களிலும் உள்ள பள்ளிகளும் மக்களும் நலம் பெறுவர்கள்” என தெரிவித்துள்ளார்.