பெங்களூரு:
ர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். இதுதவிர இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை மாலை வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் பரவலாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.