பெங்களூரு:

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் தலைவர் விஸ்வநாத் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

தலா ஒரு தொகுதியில் ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரஸும் வெற்றி பெற்றன. சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார்.

இவர் எம்எல்ஏவாகவும் உள்ளார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலரை அமைச்சர்களாக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். எனினும் தான் அமைச்சராக விரும்பவில்லை என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு சரிவர செயல்படவில்லை.

இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இரு கூட்டணி கட்சிகளின் மாநில தலைவர்கள் இடம் பெறவில்லை. எனினும் கட்சி தோல்வியடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.