பெங்களூரு

ர்நாடகா பட்ஜெட் தொடரில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடக, மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்..

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாகக் கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்து கூறுகையில்,

”விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்குப் பரிந்து அனுப்பப்பட்டுள்ளது. 

அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாகச் செயல்படுத்தப்படும். மேகதாது அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ’’வரும் நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை அம்மாநில முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.