பெங்களூரு: கொரோனா பொதுமுடக்கத்தில், நீதிமன்ற பணிகளும் முடங்கிய நிலையில், அதை 2021ம்ஆண்டு ஈடுபட்ட கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம்21ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நீதிமன்ற பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கின. மக்களின் வாழ்வாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பின்னர் மத்தியஅரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக, நீதிமன்ற பணிகள் உள்பட சில பணிகள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் தொடங்கியது. அதுபோல நீதிமன்றங்களும் காணொளி காட்சி மூலம் விசாரணைகளை தொடங்கியது.
முதல்கட்டகமாக அவசர வழக்குகள் ஏப்ரல் மாதம் முதல் சில நீதிபதிகளால் விசாரிக்கப்ட்டது. பின்னர், மே மாத கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டு அவசர வழக்குகள் காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஜூலை மாதத்தில் இருந்து நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு வந்தாலும், காணொளி காட்சி வாயிலாகவே விசாரணை நடைபெற்றது. தற்போதுதான், கொரோனா கட்டுபாடுகளுடன் நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.
பொரோனா லாக்டவுன் காரணமாக, ஏராளமான வழக்குகள் முடங்கி உள்ளன. இதை ஈடுகட்டும் வகையில், கர்நாடக உயர்நீதிமன்றம், 2021ம் ஆண்டு அதிகமான அமர்வுகளை அறிவித்து உள்ளது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வழக்குகள் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.