ஓய்வூதியதாரர்கள் ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க 2021 பிப்ரவரி வரை அவகாசம்! மத்தியஅரசு

Must read

டெல்லி:   ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate) அளிக்க  கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற உயிர்வாழ் சான்றிதழை அளிப்பது அவசியம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக, ஓய்வூதியதாரர்கள்  ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க டிசம்பர் 31ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2021 பிப்ரிவரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது,  “ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளில் ஓய்வூதியதாரர்கள் கூடுவதால், தொற்று நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் லைப் சர்டிபிகேட் வழங்க பிப்ரவரை, 2021 வரை அவகாசலம் வழங்கி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“80 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு தனி கவுண்ட்டர் ஒதுக்கப்பட்டு நவம்பர் முதல் அவர்கள் தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத்தை தொடர வருடம்தோறும் ஆயுள் சான்றிதழ் தேவைப்படுவதால், சான்றிதழ் வழங்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கி தபால் வங்கி கணக்கு வழியாக பெறும் வகையில் எளிமையாக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது கிராமப்புற ஓய்வூதியதாரர்களுக்கு மிகவசதியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக முகத்தை காட்டியதும் அடையாளம் காணும் தொழில்நுட்பம் வழியாக ஆயுள் சான்றிதழ் வழங்கும் முறையை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article