பெங்களூரு :

திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி கே.ஆர். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் 2020ம் ஆண்டு மே மாதம் புகாரளிக்கப்பட்டது.

இந்த புகார் அளித்த பெண்ணும் வெங்கடேசும் 8 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை மோசடி செய்ததாக அதில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது மோசடி செய்ததாக கூறி ஐ.பி.சி. 415 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி கே. நடராஜன் தலைமையிலான பெஞ்ச், “திருமணம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியை மீறுவது மோசடி குற்றத்தில் வராது என்றும் மோசடி செய்ததற்கான ஆதாரத்தை அந்த பெண் வழங்காத நிலையில் மோசடி பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடியாது” என்றும் தீர்ப்பளித்துள்ளது.