பெங்களூர்:
கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது.
ஊரடங்கு இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்றும் இன்னும் தெரியாத நிலையே தொடர்ந்து வருகிறது.
இது குறித்து சில ஆசிரியர்கள் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம் வரை, அதாவது 2 மாதங்களுக்கு பின்னரே, வழக்கமான பள்ளி காலண்டர் ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கல்வி நிறுவனங்கள், பாடங்களை நடத்த மாற்று வழிகளை தேடி வருக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், கிண்டர் கார்டன் உள்பட அனைத்து வகுப்பு களையும் ஆன்லைன் மூலம் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார், கிண்டர் கார்டன் லெவல் மாண்வர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இது குறித்து கல்வித்துறை கமிஷனரிடம் பேசினேன். அவரும் இது போன்று சிறிய குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பது தவறு என்று ஒப்பு கொண்டார். மேலும் பேசிய அவர், எல்கேஜி குழந்தைகளுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் அளவுக்கு கஷ்டமான பாட திட்டம் இல்லை. மேலும், சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப் வாங்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தி வருவதாகவும் தவறாகும் என்றும் அவர் கூறியதாகவும், அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் சுரேஷ் குமார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எக்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் ஏன் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகின்றன? இது தவறு. இந்த தவறை செய்யும் கல்வி நிறுவனங்கள், கல்வி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆன்லைன் பாடம் நடத்துவதால் எங்களுக்கு ஒண்ணும் கிடைக்காது, ஆனால் பள்ளி சென்று பாடம் நடத்தினால் பணம் கிடைக்கும் என்றனர்.
வழக்கமாக பள்ளி அட்மிஷன் ஏப்ரல் மாதத்தில் துவங்கும். ஊரடங்கு காரணமாக அடுத்த கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் நடை பெறவில்லை. இருந்தாலும் பள்ளிகள், பெற்றோர்களை தொடர்பு கொண்டு, பள்ளி அட்மிஷன் தொகையை செலுத்தி விடுமாறும், இப்போதே ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ளதகவும் தெரிவித்துள்ளன. அவ்வாறு செலுத்தா விட்டால், உங்கள் குழந்தை இந்த கல்வியாண்டை தவற விட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்து உள்ளதாக பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டு கொண்ட அந்த ஆசிரியர், வீட்டில் இருக்கும் ஆன்லைனில் விடுப்பு எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். குழந்தைகளில் அருகில் பெற்றோர் இருக்கும் போது குழந்தைகளின் கவனம் படிப்பில் இருக்காது என்றார்.
ஆன்லைன் வகுப்பு குறித்து சில பள்ளிகள், பெற்றோர்களுக்கு, மாதிரி வகுப்புகள் நடத்தி காட்டியுள்ளன. இது குறித்து, பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில், எனது குழந்தை டிவி பார்த்து கொண்டு பொழுதை கழிப்பதை விட சில மணி நேரம் ஆன்லனில் படிப்பது நல்லது தான். பள்ளிகள் நடத்தி காட்டிய ஆன்லைன் வகுப்பின் போது, வீட்டில் இருக்கும் குழந்தைகள், ஏ,பி,சி,டி-யை கூட மறந்து விடுவார்கள் என்று தெரிவித்தனர். அவர்கள் சொல்வது உண்மைதான். என்ன, குழந்தைகள் படிக்க வைக்க நாங்கள் சில மணி நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது என்றார்.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அரசு இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுப்பது குறித்து புகார் பெறப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை தெரிவித்துள்ளது.