பெங்களூரு

கொரோனாவால் மரணமடைந்தோரில் சடலங்களை எரிப்பது மற்றும் புதைப்பது அவரவர் உறவினர் பொறுப்பு என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 2101 பேர் மரணம் அடைந்து மொத்தம் 1.84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் கர்நாடகாவில் மட்டும் 116 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மற்ற தென் இந்திய மாநிலங்களை விட அதிக எண்ணிக்கை ஆகும்.

இந்நிலையில் கர்நாடக அரசு நேற்று ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.  அதில், ”கர்நாடகாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து மருத்துவச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மற்றும் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.    ஏற்கனவே இவ்வாறு மரணம் அடைவோர் சடலங்களைப் புதைக்க மற்றும் எரிப்பதற்கான வழி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மரணமடைந்தோரின் உரவினரக்ள் மற்றும் குடும்பத்தினர் அந்த சடலங்களை தங்களது சொந்த நிலம் அல்லது பண்ணை வீடுகளில் புதைக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றனர்.   அத்துடன் மயானங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் மரணமடைந்தோருக்குக் கவுரவமான முறையில் ஈமச் சடங்குகள் செய்யப்படவேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

எனவே கொரோனாவால் மரணம் அடைந்தோரின் சடலங்களை அவரவர் உறவினர் மற்றும் குடும்பத்தினர் விருப்பப்படி சொந்த நிலம் மற்றும் பண்ணை வீடுகளில் புதைக்கவோ எரிக்கவோ அனுமதிக்கப்படுகிறது.   இந்த புதைத்தல் மற்றும் எரித்தல் அரசின் கொரோனா மரண விதிமுறைகளை மீறாமல் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்குக் கர்நாடக மக்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  டிவிட்டரில் இந்த அறிவிப்பு குறித்து, “பாஜக அரசு தன்னால் சடலங்களை எரிக்க அல்லது புதைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.   அதாவது குடும்பத்தினர் இந்த சடலங்களை எப்படி வேண்டுமானாலும் அகற்றலாம்.  இது போல ஒரு கொடூர அரசு உத்தரவை இதுவரை கண்டதில்லை” என விமர்சித்துள்ளனர்.

[youtube-feed feed=1]