கர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்குட்பட்ட ஜலஹள்ளி பகுதியில் பாஜக பிரமுகர் ஃபிளாட்டில் 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள், பிரிண்டர்கள், லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது குறித்து கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி புகார் அளித்தனர். இதையடுத்து இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் 28-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka: Fake voter cards captured constituency election postponed, கர்நாடகா: போலி வாக்காளர் அட்டைகள் சிக்கிய தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு
-=-