சென்னை:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் பாரதியஜனதா முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள எடியூரப்பாவுக்கு திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யிலான தமிழக காவிரி உரிமையை மீறாமல் அண்டை மாநிலமான தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யும் என்று நம்புகிறேன். அதேபோல், விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூற உள்ளார்.