பெங்களூரு

ர்நாடக மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி என்பவர் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்தவர் ஆவார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு கவிழ்ந்ததையொட்டி பாஜக ஆட்சி அமைத்தது. கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். கர்நாடக மாநிலத்தில் 3 துணை முதல்வர்களை நியமிக்க பாஜக தலைமை உத்தரவிட்டது. அதையொட்டி எடியூரப்பா மூவரைக் கர்நாடக மாநிலத் துணை முதல்வராக நியமித்துள்ளார்.

அவர்கள் மகதப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், மற்றும் லட்சுமண் சங்கரிப்பா சாவடி ஆகியோர் ஆவார்கள். இவர்களில் லட்சுமண் சங்கப்பா சாவடி ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பணி புரிந்துள்ளார். கடந்த 2012 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி அன்று தொலைக்காட்சிகளில் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பப் பட்டது.

அந்த ஒளிபரப்பில் சாவடி தனது மொபைலில் ஒரு பெண்ணின்  ஆபாசப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அருகில் அமர்ந்திருந்த கூட்டுறவு அமைச்சர் சி சி பாடில் அதை எட்டிப் பார்ப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் அப்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியது அதையொட்டி தனது தொகுதி அதானியில் சாவடி மின்சார விநியோகத்தை நிறுத்தினார்.

அதன் பிறகு அவர், “ஒரு பெண் நால்வரால் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் வந்தது. அதைப் பற்றி அறிந்துக் கொள்ளவும் அதன் துயரத்தை உலகுக்கு அறிவிக்கவும் நான்  இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆபாச வீடியோக்களை பார்க்கும் அளவுக்கு நான் மட்டமான மனநிலை உள்ளவர் அல்ல” எனப் பதில் அளித்தார். ஆயினும் ஒரு வாரம் கழித்து அவர் ராஜினாமா செய்தார்.

சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு ஆபாச வீடியோவைப் பார்த்த சாவடி மற்றும் அதை எட்டிப் பார்த்த பாடில் இருவரும் கர்நாடக அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.