கார்நாட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர், ஹசன், மைசூர், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.
இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.42 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 34,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து 3,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த அணைகள் முழு கொள்ளளவை விரைவில் எட்டிவிடும்.
இதனால் அணையில் இருந்து அதிகப்படியான நீர் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி கையோரம் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.