மும்பை:

ர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் அரசியல் களேபரம் தற்போது மும்பைக்கு தாவியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜக கட்டுப்பாட்டில், மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாரை உள்ளே விட காவல் துறையினர் மறுத்து உள்ளார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

கர்நாடக மாநிலத்தில்  மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி பதவி ஏற்றது முதலே அங்கு பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.   அமைச்சர் பதவி, இலாகா ஒதுக்கீடு போன்றவற்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல எம்எல்ஏக்கள் பதவி கேட்ட போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேலும் ஆதரவு அளித்து வரும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டி அமைச்சர் பதவி பெற்றனர்.

இந்த நிலையில், தங்களுக்கும் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த  13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர். அதையடுத்து அவர்கள் மும்பைக்கு பறந்தனர்.

இதன் காரணமாக கர்நாடக  மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  115 என்றிருந்த பெரும்பான்மை, தற்போது 103ஆக குறைந்துள்ளது. இதன காரணமாக ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், 105 தொகுதிகள் வைத்துள்ள பாஜக, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க மறுப்பதாக சபாநாயகர் நேற்று அறிவித்து உள்ளார். இதன் காரணமாக  ஆட்சி நீடித்து வருகிறது…

இந்த நிலையில், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள  ரினைசன்ஸில் ஓட்டலில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்கை, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்  டிகே சிவகுமார் மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.  அதன் காரணமாக  ஓட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் நோக்கில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் மும்பை விரைந்தார். ஆனால், அவரை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  அப்போது போலீசாருடன் டிகே சிவகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதேசமயம் மஜத கட்சி ஆதரவாளர்கள் நாராயணா கவுடா தலைமையில்,  டிகே சிவகுமார் உள்ளே வரக் கூடாது, கோ பேக், கோ பேக்  என்று கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

இதையடுத்து  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், மும்பை போலீஸ் அவர்களுடைய பணியைச் செய்கிறார்கள். நாங்கள் எங்களின் நண்பர்களை சந்திக்க வந்துள்ளோம். அரசியலில் ஒன்றாக பிறந்தோம். ஒன்றாக இறப்போம்.   அவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களை நான் சந்தித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்து மும்பையில் முகாமிட்டு உள்ளார்.

இதன் காரணமாக கர்நாடக அரசியல் களேபரம் தற்போது மும்பையில் தொடர்ந்து வருகிறது.