தும்கூர்

இன்று கர்நாடக மாநிலத்தில் விடுமுறை இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

இறு அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலைத் திறந்து வைக்கிறார்.  அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பாஜகவினரும், இந்து அமைப்பினரும் மாபெரும் விழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களும் பொது விடுமுறை அறிவித்து இருக்கிறது. இதிஅப் போல் கர்நாடகத்திலும் இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.

நேற்று தும்கூர்ல் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம்,

இன்று அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடப்பதையொட்டி கர்நாடகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் விசேஷ பூஜைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயினும் இன்று மாநிலத்தில்  பொது விடுமுறை கிடையாது.

மாறாக நான் இன்று பெங்களூரு மகாதேவபுராவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலைத் திறந்து வைக்கிறேன். என்னை அந்த விழாவுக்கு அழைத்துள்ளதால் அதில் நான் கலந்து கொள்கிறேன்.”

என்று தெரிவித்துள்ளார்.