பெங்களூரு

ர்நாடக பாஜக எம் எல் ஏ ஹலால் உணவு குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அிந்து வர கர்நாடக அரசு தடை விதித்ததையொட்டி கடும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது.   இந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மறுத்தது.   முஸ்லிம் மாணவிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.   தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களாகக் கர்நாடகத்தில் முஸ்லீம் ஓட்டல்களில் தயார் செய்யப்படும் ஹலால் உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்  பாஜக தேசிய பொது செயலாளரும், கர்நாடகா சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சிடி ரவி, ”இந்துக்கள் ஹலால் இறைச்சி உணவை இந்துக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கும் போது அந்த உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?.  இந்துக்களிடம் இருந்து முஸ்லீம்கள் இறைச்சியை வாங்க மறுக்கும் போது, இந்துக்கள் மட்டும் ஏன் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும்

ஹலால் இல்லாத இறைச்சியை முஸ்லீம்கள் பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியைப் பயன்படுத்துவார்கள்” என சி டி ரவி கூறி உள்ளார்.  ஏற்கனவே ஹிஜாப் குறித்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே தகராறு நிலவி வரும் வேளையில் பாஜகவின் சிடி ரவியின் பேச்சு கடும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.